

தைபே: தைவானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியிருந்தது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “தைவானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென் கிழக்கு கடற்கரை பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 50 கிமீ ஆக இருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானதைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் குலுங்கின
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. எனினும் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் கட்டிங்கள், ரயில்கள் குலுக்கும் காட்சிகள் சமூக சலைதளங்களில் வெளியாகி உள்ளன.
இவை பசிபிக் வளைய பகுதியில் அமைந்துள்ளதால் தைவானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
தைவானில் கடந்த 1999 ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்துக்கு 2,400 பேர் வரை பலியாகினர். அதுவே அங்கு கடைசியாக ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக அறியப்படுகிறது.