டொனால்டு ட்ரம்ப் வெற்றியை எதிர்த்து அமெரிக்காவில் கலவரம் வெடித்தது: துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் படுகாயம்

டொனால்டு ட்ரம்ப் வெற்றியை எதிர்த்து அமெரிக்காவில் கலவரம் வெடித்தது: துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் படுகாயம்
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றதை எதிர்த்து அந்த நாடு முழுவதும் கலவரம் வெடித்துள் ளது. சியாட்டில் பகுதியில் மர்ம நபர் சுட்டதில் 5 ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகாயம் அடைந்தனர்.

கடந்த 8-ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு பகுதி களில் கலவரம் வெடித்துள்ளது.

நியூயார்க், லாஸ்ஏஞ்சல்ஸ், சியாட்டில், ஆக்லாந்து உட்பட 16 முக்கிய நகரங்களில் பொதுமக்கள் நேற்றுமுன்தினம் சாலைகளில் திரண்டு பேரணி, ஆர்ப்பாட்டம் நடத் தினர். ஒவ்வொரு நகரிலும் ஆயிரக் கணக்கானோர் சாலைகளில் திரண்டு ட்ரம்புக்கு எதிராக கோஷ மிட்டனர்.

கலிபோர்னியா மாகாணம் ஆக்லேண்டில் நடந்த பேரணியில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. ட்ரம்ப் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. போலீஸார் கண்ணீர் புகைக் குண்டு களை வீசி தடியடி நடத்தினர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் பேரணியில் பலர் கைது செய்யப்பட்டனர். நியூ யார்க்கில் நடந்த பிரமாண்ட பேரணி யில் பாப் பாடகி மடோனா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

சிகோகோ, இலியானிஸ், போர்ட் லேண்ட், ஒரிகான், சான் பிரான் சிஸ்கோ, போஸ்டன், கன்காஸ் சிட்டி, நியூஆர்லியன்ஸ், ரிச்மாண்ட், சான்டியாகோ, நவேடா, டல்லாஸ், பெனிஸ்வேனியா உள்ளிட்ட பகுதி களில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன. வாஷிங்டனில் உள்ள அதிபர் மாளிகை முன்பு ட்ரம்புக்கு எதிராக மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

சியாட்டில் நகரில் ட்ரம்புக்கு எதிராக போராட்டங்கள் நடை பெற்றன. அப்போது ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்கா முழுவதும் ட்ரம்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம், பேரணி நடத்திய நூற்றுக்கணக் கானோர் கைது செய்யப்பட்னர்.

ட்ரம்ப் வீட்டுக்கு பாதுகாப்பு

நியூயார்க் நகரில் டொனால்டு ட்ரம்புக்கு சொந்தமான 58 மாடிகள் கொண்ட ‘ட்ரம்ப் டவர்’ வணிக வளாகம் உள்ளது. இதில்தான் அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று அந்த வணிக வளாகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர் களை போலீஸார் அப்புறப்படுத் தினர்.

ட்ரம்ப் டவர் வளாகத்தில் இருந்து 2 மைல் தொலைவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அந்தப் பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடைவிதிக் கப்பட்டுள்ளது. ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் குடியேறும் வரை ட்ரம்ப் டவர் வளாகத்தில் பாதுகாப்பு நீடிக்கும் என்று அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in