

சிங்கப்பூரில் ஆளில்லா விமானம் மூலம் தபால்களை பட்டுவாடா செய்யும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சிங்கப்பூரின் அரசு துறை தபால் நிறுவனம் சிங்போஸ்ட். இந்த நிறுவனம் கடந்த 8-ம் தேதி சோதனை முறையில் ஆளில்லா விமானம் மூலம் ஒரு தபால் பட்டு வாடா செய்தது. அந்த விமானத்தில் குறிப்பிட்ட முகவரிக்கு ஒரு கடிதம், ஒரு டி-சர்ட் பார்சல் அனுப்பப் பட்டது. 2 கி.மீ. தொலைவை 5 நிமிடங் களுக்குள் கடந்த ஆளில்லா விமானம் தபாலை உரிய முகவரி யில் பட்டுவாடா செய்தது.
இதுகுறித்து சிங்போஸ்ட் வட்டாரங்கள் கூறியபோது, ஆளில்லா விமானங்கள் அரை கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. கட்டுப்பாட்டு அறை யில் இருந்து விமானத்தை இயக்கி குறிப்பிட்ட முகவரியில் ஒப்படைக் கிறோம். விரைவில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தன.