

ஜப்பானில் நேற்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.6 ஆக பதிவானது.
ஜப்பானில் கடந்த 21-ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.4 ஆக பதிவானது. இதனால் சுனாமி அலைகளும் எழுந்தன. புகுஷிமா அணு மின் நிலைய பகுதியை சுனாமி தாக்கியதால் அந்த அணுஉலை மூடப்பட்டது.
இந்நிலையில் அதே பகுதியில் நேற்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 5.6 ஆக பதிவானது. எனினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
கடந்த 2011 மார்ச்சில் சுனாமி அலைகள் தாக்கி புகுஷிமா அணுஉலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டு பேரிழப்புகளும் ஏற்பட்டது. நிலநடுக்கம், சுனாமியால் புகுஷிமா அணு மின் நிலையம் சேதமடைந்து கதிர்வீச்சு ஏற்படும் அபாயம் இருப்பதால் ஜப்பான் அரசு மிகுந்த விழிப்புடன் செயல்பட்டு வருகிறது.