வைரல் பதிவு - ‘சூரியனின் நிறம் வெண்மைதான்!’

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சூரியன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் என்றுதானே நாம் அனைவரும் நினைத்திருக்கிறோம். ஆனால், சூரியனின் நிறம் மஞ்சள் இல்லையாம். இந்த தகவலை நாசாவின் விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி வெளியிட்டுள்ளார்.

சூரியனின் உண்மையான நிறம் வெண்மை. ஆனால், அது பூமியிலிருந்து பார்க்கும்போது மஞ்சளாக இருப்பதன் பின்னணியில் இயற்பியல் இருக்கிறது. உண்மையில் சூரியனின் ஒளிக்கற்றையிலிருந்து வரும் அனைத்து நிறங்களும் ஒன்றிணைந்து அது வெண்மையாகத்தான் தெரியும். நீங்கள் விண்வெளியிலிருந்து சூரியனைப் படம் எடுக்கும்போது அது வெண்மையாகத்தான் இருக்கிறது.

ஆனால், பூமியில் சூரியன் மஞ்சள் நிறமாக தெரிவதற்கு காரணம், நமது வளிமண்டலம்தான். சூரியனின் ஒளிக்கதிரில் உள்ள நீண்ட அலைநீளங்களைக் கொண்ட நிறங்கள் நம் கண்களை எளிதில் அடைகின்றன. இதில் சூரியனில் இருந்து வெளிப்படும் குறுகிய அலைவரிசை நீல நிற ஒளி வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படுவதால் வானம் நீல நிறத்தில் தெரிகிறது. அதேநேரம் அதற்கு எதிரான நீண்ட அலைவரிசை ஒளியான மஞ்சள் - சிவப்பாக சூரியன் தெரிகிறது. இதன் காரணமாகத்தன் சூரியன் மஞ்சளாக தெரிகிறது.

இந்தத் தகவலை ட்விட்டரில் ’Latest in space’ என்ற அறிவியல் பக்கம் வெளியிட்டிருந்தது. இந்தப் பதிவவை, நாசாவின் விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி ”இது உண்மைதான்” என குறிப்பிட்டதைத் தொடர்ந்து இப்பதிவு வைரலானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in