

கறுப்பு பணத்தை ஒழிக்க இந்தியாவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது போல பாகிஸ்தானிலும் 1,000 மற்றும் 5,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற வேண்டும். மேலும் ரொக்க பணப் புழக்கத்தை குறைத்து, நேரடியாக வங்கிகள் மூலம் பணபரிவர்த்தனை நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி எம்பியான ஒஸ்மான் சைபுல்லா கான் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நிதித் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக பேசிய கான், ‘‘நமது பொருளாதாரத்தை சிதைத்துக் கொண்டிருக்கும் கறுப்பு பணத்தை ஒழிக்கவும், மக்கள் மத்தியில் வங்கி பயன் பாட்டை பழக்கப்படுத்தவும் இதுவே சிறந்தவழி’’ என்றார்.
அதே சமயம் கானின் யோச னைக்கு அனைத்து எம்பிக்களும் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என நிலைக்குழு தலைவர் சலீம் தெரிவித்துள்ளார்.