Last Updated : 09 Nov, 2016 11:35 AM

 

Published : 09 Nov 2016 11:35 AM
Last Updated : 09 Nov 2016 11:35 AM

இப்போது என்ன செய்கிறார் ட்ரம்ப்?- நண்பரின் அப்டேட்ஸ்

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் 'டயட் கோக்' குடித்துக் கொண்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என அவரது நண்பர் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் வாக்குப்பதிவுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார். வெற்றிக்கு தேவை 270 இடங்களில் வெற்றி. இவற்றில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் 244 இடங்களிலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி 209 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த நிலையில், டிரம்பின் முன்னிலை குறித்து வாஷிங்டன் போஸ்ட்டுக்கு கருத்து தெரிவித்த டொனல்டு ட்ரம்பின் நண்பரும், முன்னாள் நியூயார்க் நகர மேயருமான ரூடி ஜுலியானி கூறும்போது, "குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தனது டயட் கோக்கை குடித்துக் கொண்டு தேர்தல் முடிவுகளை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இன்னும் அவர் உணவு கூட சாப்பிடவில்லை. நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x