ராணி எலிசபெத்தின் கடைசி போட்டோ

ராணி எலிசபெத்தின் கடைசி போட்டோ
Updated on
1 min read

லண்டன்: மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் தங்கியிருந்தார். அவர் ஊன்று கோல் உதவியுடன் நடமாடி வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸை அவர் நியமித்தார். இவர் ராணி எலிசபெத் நியமித்த 15-வது பிரதமர். அப்போது பால்மோரல் அரண்மனையில், புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்சுடன் கைகுலுக்குவது போன்றும், நெருப்பூட்டி குளிர் காயும் இடத்தில் தனியாக நின்றபடியும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை ஜேன் பர்லோ என்ற போட்டோகிராபர் படம் பிடித்தார். ஊன்று கோல் உதவியுடன் நின்றபடி, சிரித்த புகத்துடன் ராணி எலிசபெத் போஸ் கொடுத்தார். அந்தப் படமே மறைந்த ராணியின் கடைசி படமாகிவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in