

கடந்த 2008 நவம்பர் 26-ம் தேதி மும்பையின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக் குதல் நடத்தினர். இதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜமாத் உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையது மூளையாக செயல்பட்டார்.
அவரை இந்தியாவிடம் ஒப் படைக்குமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் பாகிஸ்தான் அரசு அவருக்கு பக்க பலமாக செயல்பட்டு வருகிறது. அவரது தலைக்கு அமெரிக்க அரசு ரூ.66 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது.
இந்தப் பின்னணியில் சில நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு ஹபீஸ் சையது பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தானின் உண்மையான எதிரி அமெரிக்கா. பாகிஸ்தான் ராணுவத்தின் பலத்தைக் குறைக் கவும் அணுஆயுதங்களை குறைக் கவும் அந்த நாடு முயற்சி மேற் கொள்கிறது. இந்தியாவின் விருப் பத்துக்கு ஏற்ப பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிர்பந்தம் அளிக்கிறது.
காஷ்மீரின் சுதந்திரத்துக்காக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாது. அமெரிக் காவை நினைத்து பயப்பட வேண் டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:
ஒரு தீவிரவாதியின் பேச்சுக்கு மதிப்பளிக்க நான் விரும்பவில்லை. மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் மண்ணைத் தீவிரவாதிகள் பயன் படுத்த அனுமதி அளிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.