‘அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கே வாக்களிப்பேன்’- டிரம்ப் கட்சித் தலைவர் பவெல் அதிரடி அறிவிப்பு

‘அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரிக்கே வாக்களிப்பேன்’- டிரம்ப் கட்சித் தலைவர் பவெல் அதிரடி அறிவிப்பு
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கே வாக்களிக்கப் போவதாக குடியரசுக் கட்சியை சேர்ந்தவரும், முன்னாள் வெளியுற வுத் துறை அமைச்சருமான காலின் பவெல் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதி வுக்கு இருவாரங்களே இருக்கும் நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும், அவரை எதிர்த்து போட்டியிடும் குடி யரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் தீவிர தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் அதிபராக ரொனால்டு ரீகன் பதவி வகித்த காலத்தில் இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த குடியரசுக் கட்சி தலைவரான காலின் பவெல், இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக வாக் களிக்க முடிவு செய்துள்ளார். ஏற் கெனவே 2008 மற்றும் 2012-ல் நடந்த தேர்தலின்போதும் அதிபர் பராக் ஒபாமாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு அனை வரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இந்நிலையில், இந்தத் தேர்த லிலும், சொந்தக் கட்சி வேட்பாள ரான டிரம்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர் பாக அவர் அனுப்பிய இ-மெயில் கடிதங்களில் ஒன்று வெளியே கசிந்துள்ளது. அதில், ‘‘டிரம்ப் தகுதி யற்றவர். அதிபர் தேர்தல் விவ காரத்தில் நான் வாய்திறக்க வேண் டும் என பலர் விரும்பினர். ஆனால் அதற்கான நேரத்துக்காக நான் காத்திருந்தேன். தற்போது அந்தக் காலம் கனிந்துவிட்டது. டிரம்ப் சொந்தக் கட்சிக்கே மோசமான எதிரியாக தென்படுகிறார். இதனால் ஹிலாரிக்கு தான் வாக்களிக்கப் போகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

பவெலின் இந்த முடிவுக்கு ஹிலாரி கிளிண்டன் மிகுந்த வர வேற்பு தெரிவித்துள்ளார். ஏற் கெனவே குடியரசுக் கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் ஹிலா ரிக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் முக்கியத் தலைவராக மதிக்கப்படும் பவெலும் அவர்களுடன் இணைந்து ஆதரவு குரல் எழுப்பியிருப்பது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in