Published : 06 Sep 2022 08:16 AM
Last Updated : 06 Sep 2022 08:16 AM

ஆப்கனில் ரஷ்ய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: 2 அதிகாரிகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் ரஷ்ய தூதரகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 2 தூதரக அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் காபூலில் உள்ள ரஷ்யத் தூதரகத்தில் நேற்று காலை விசா பெறுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீதுமனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், குண்டுவெடிப்பில் ஏற்பட்டஉயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து ஆப்கானிஸ்தான் தரப்பில் இதுவரை தகவல் வெளியிடவில்லை.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ரஷ்ய தூதரக அலுவலகத்துக்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நேற்று காலை 10.45 மணி அளவில் ஒருவர் வந்துள்ளார். அப்போது தூதரக அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அந்த மர்ம நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். இந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காலை 10.50 மணிக்கு இந்தசம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஆப்கனைச் சேர்ந்த பொதுமக்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர்" என்றார்.

கடந்த 2 நாள்களுக்கு முன் வடமேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ளமசூதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய தூதரகம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது காபூலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x