Published : 05 Sep 2022 08:54 AM
Last Updated : 05 Sep 2022 08:54 AM
லண்டன்: பொதுவாக சிலர் தங்கள் குழந்தைகளுக்கு புகழ்பெற்ற ஒருவர் அல்லது இடத்தின் பெயரை சூட்டுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், குழந்தைக்கு தங்களுக்கு பிடித்த உணவுப்பொருளின் பெயரை சூட்டியதாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறார்களா?
ஆம். கேள்விப்பட்டிருக்கிறோம். கேக் மேல் வைக்கப்படும்செர்ரி பழத்தின் பெயரை சிலர் குழந்தைக்கு சூட்டி உள்ளனர்.
அந்த வகையில், பிரிட்டனின் அயர்லாந்தில் உள்ள நியூடவுனாபே நகரில் உள்ள ஒரு புகழ்பெற்ற உணவகம், சுவாரஸ்யமான ஒரு செய்தியை சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதாவது தங்கள் உணவகத்துக்கு அடிக்கடி வரும் ஒருதம்பதி தங்கள் குழந்தைக்குஒரு உணவுப் பொருளின் பெயரை வைத்துள்ள தாக அதில் கூறப்பட்டுள்ளது.
அது என்ன உணவுப்பொருள் என்று கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆம், இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமாக ‘பக்கோடா’ என்ற பெயரைத்தான் அந்த தம்பதி தங்கள் குழந்தைக்கு வைத்துள்ளனர். குழந்தையின் புகைப்படத்தையும் உணவகநிர்வாகம் முகநூலில் வெளியிட்டுள்ளது.
அதில், “இது இந்த உலகத்துக்கு வந்துள்ள முதல் பக்கோடா” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவை ஏராளமானோர் லைக் செய்து, வாழ்த்து தெரிவித்து, பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியாவில் பிககோராவைபக்கோடா என்றே பெரும்பாலா னோர் அழைக்கின்றனர். பிகோரா, பகோடி என்ற பெயரிலும் இது அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பதிவை ஏராளமானோர் லைக் செய்து, வாழ்த்து தெரிவித்து, பகிர்ந்து வருகின்றனர். மேலும் சிலர் வேடிக்கையானகருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் “இது என்னுடைய 2 பதின்ம வயது பிள்ளைகள் - சிக்கன் மற்றும் டிக்கா” என குறிப்பிட்டுள்ளார்.
சிக்கன் பால்: மற்றொருவர் தனது குழந்தையின் படத்தை பதிவேற்றம் செய்து, “இது என்னுடைய குழந்தை, அவன் பெயர் சிக்கன் பால்” என தெரிவித்துள்ளனர். இதுபோல், பலரும் தங்களு டைய குழந்தைகளுக்கு புதுமை யான பல பெயர்களை வைத்து இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT