

சிரியாவில் பொதுமக்கள் இருப்பிட பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 12 பேர் பலியாகினர்.
சிரியாவின் அலெப்போ நகரின் இன்று (திங்கட்கிழமை) பொதுமக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதல் குறித்து சிரிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட தகவலில், "பொதுமக்கள் பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 12 பேர் பலியாகினர். வான்வழித் தாக்குதலில் தரைமட்டமான கட்டிட இடிப்பாடுகளில் பலர் சிக்கியுள்ளனர்.
மேலும், அலெப்போ நகரின் கிழக்கில் போராட்டக்காரர்கள் பகுதியில் நடந்த சண்டையில் 5 சிறுவர்கள் பலியாகினர்" என்று கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அலெப்போ நகரில் நடைபெற்ற சண்டையில் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.