

இராக் ராணுவம் ஐஎஸ் தீவிரவாதிகளை மொசுல் நகரிலிருந்து விரட்டியடிக்கும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒபாமா செய்தி யாளர்களிடம் கூறியதாவது: இராக் கின் மொசுல் நகரம் ஐஎஸ் தீவிர வாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களின் புகலிடம் மற்றும் ஆயுதங்கள் இருப்பு வைக்கப் பட்டுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக மொசுல் விளங்குகிறது.
இந்நிலையில், அமெரிக்கா, இத் தாலி உள்ளிட்ட நாடுகளின் ஆதர வுடன் இராக் ராணுவம் மொசுல் நகரை மீட்க அதிரடி நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அந்த நகரைச் சுற்றி வளைத்துள்ள ராணுவம் படிப்படியாக நெருங்கிச் செல்கிறது.
எனினும், சண்டை கடுமையாக வும் கடினமானதாகவும் இருக்கும். அதேநேரம், இராக் ராணுவம் துணி வுடனும் திறமையாகவும் சண்டை யில் ஈடுபடுவதால், இந்த முறை ஐஎஸ் தீவிரவாதிகள் அங்கிருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.