

வடக்கு இராக்கின் மின்னுற்பத்தி ஆலையில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியாகினர்.
இந்தத் தாக்குதல் குறித்து இராக் அரசு தரப்பில் கூறும்போது, "வடக்கு இராக்கின் கிர்குக் நகரின் மின்னுற்பத்தி ஆலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியளவில் நுழைந்த மூன்று தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர்.
இதில் மின்னுற்பத்தி ஆலையில் பணிபுரிந்த 12 பொறியாளர்கள், நான்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் என 16 பேர் பலியாகினர்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்று கொண்டுள்ளது.
மேலும் கிர்கு நகரின் மற்றுறொரு பகுதியில் ஐ.எஸ் அமைப்புக்கும், போலீஸார்க்கும் இடையே நடந்த சண்டையில் போலீஸார் தரப்பில் ஆறு பேரும், ஐ.எஸ் தரப்பில் 12 பேரும் பலியாகினர்.