அமெரிக்காவில் ஒமர் அப்துல்லாவிடம் 2 முறை சோதனை

அமெரிக்காவில் ஒமர் அப்துல்லாவிடம் 2 முறை சோதனை
Updated on
1 min read

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் குடியேற்ற ஆவணங்களை அதிகாரிகள் 2 முறை சோதனையிட்டனர்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், “நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்துள்ளேன். ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங் கியபோது என்னுடைய குடி யேற்ற ஆவணங்களை 2 முறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனால் விமான நிலையத்தில் சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நான் இங்கு வரும்போதெல்லாம் இதுபோன்ற சம்பவம் நிகழ்கிறது” என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கான் கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா சென்றிருந்த போதும் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in