கின்னஸ் சான்றிதழுடன் விவசாயி  செபாஸ்டியன் சுஸ்கி.
கின்னஸ் சான்றிதழுடன் விவசாயி செபாஸ்டியன் சுஸ்கி.

நீளமான வெள்ளரிக்காய் வளர்த்து பிரிட்டன் விவசாயி உலக சாதனை

Published on

லண்டன்: மிக நீளமான வெள்ளரிக்காயை வளர்த்து பிரிட்டன் விவசாயி ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டனின் சவுத்தாம்டன் பகுதியை சேர்ந்தவர் செபாஸ்டியன் சுஸ்கி. விவசாயியான இவர் தனது தோட்டத்தில் 113.4 செ.மீ. நீளத்துக்கு வெள்ளரியை வளர்த்து உலக சாதனை படைத்துள்ளார்.

பிரிட்டனில் பண்ணையில் வளர்க்கப்படும் விளைபொருட்கள் மீது வெப்ப அலைகள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் செபாஸ்டியன் தனது பயிர்களை வளர்த்து மிக நீளமான வெள்ளரிக்காயை விளை வித்துள்ளார்.

இதற்கு முன் 107.2 செ.மீ. நீளம் வளர்க்கப்பட்ட வெள்ளரியே உலகின் மிக நீளமான வெள்ளரியாக இருந்தது. அதுவே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்நிலையில் அதை விட 6.2 செ.மீ. கூடுதலாக வளர்த்து அந்த சாதனையை செபாஸ்டியன் சுஸ்கி முறியடித்துள்ளார். இதற்காக கின்னஸ் சான்றிதழை அவர் பெற்றுள்ளார்.

வெள்ளரிக்காய் வளர்ப்பில் மட்டும் உலக சாதனை முறியடிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மிகப்பெரிய காய்கறி வளர்ப்புக்கான போட்டியில் பல்வேறு காய்கறிகள் அதன் தனித்துவமான அளவு காரணமாக புகழ் பெற்றன. 3.12 கிலோ எடை கொண்ட ஒரு கத்தரிக்காய், முந்தைய உலக சாதனையை முறியடித்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in