

ஹாலிவுட் நடிகர் மெல் கிப்சனுக்கு (58) வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. செச்சன்யாவின் கர்லோவி வாரி நகரில் 49-வது சர்வதேச திரைப்பட விழா அடுத்த வாரம் தொடங்குகிறது. இதில் கிப்சனுக்கு இந்த விருது வழங்கப்படும் என ஹாலிவுட் செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்மூலம், நடிகர்கள் ஜூட் லா, ஜான் மல்கோவிச் மற்றும் நடிகை ஹெலன் மிரன் ஆகியோருக்கு அடுத்தபடியாக இந்தப் பட்டியலில் கிப்சனும் இணைந்துள்ளார்.
இந்த திரைப்பட விழாவின் மிக உயரிய விருது நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் ஜார்ஜ் மில்லருக்கு வழங்கப்பட உள்ளது. இவர் இயக்கிய 'மேட் மேக்ஸ்' திரைப்படம் 1979-ல் வெளியானது. இதன்மூலம் இவர் உலகப்புகழ் பெற்றார்.