

எத்தியோப்பியாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பாவில் ஒராமியா மாகாணம் பிஷோப்டு நகரில் நேற்று முன்தினம் உள்ளூர் திருவிழா நடைபெற்றது. இதில் 20 லட்சத் துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அந்த விழாவில் உள்ளூர் தலைவர் ஒருவர் மேடையில் பேசினார். அவருக்கு எதிராக மற்றொரு பிரிவினர் கோஷமிட்டு கற்களை வீசினர். இருதரப்புக்கும் இடையே மோதலைத் தவிர்க்க போலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்.
இதனால் பொதுமக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர். இதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 52 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே கூட்ட நெரிசலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந் திருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.
தாக்குதலில் உயிரிழந்தவர் களுக்காக எத்தியோப்பிய அரசு சார்பில் 3 நாட்கள் துக்கம் அனு சரிக்கப்படுகிறது. கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.