பிரபல சைக்கிள் பந்தய வீரர் ரப் வார்டெல் மரணம்: விளையாட்டு உலகம் அதிர்ச்சி

பிரபல சைக்கிள் பந்தய வீரர் ரப் வார்டெல் மரணம்: விளையாட்டு உலகம் அதிர்ச்சி
Updated on
1 min read

எடின்பர்க்: பிரபல சைக்கிள் பந்தய வீரரான ரப் வார்டெல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 37.

ரப் வார்டெல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் ஸ்காட்லாந்தின் தேசிய அளவில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றார். இந்த நிலையில், அவரது மரணச் செய்தி அந்நாட்டு மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரப் ஏர்டேல்லின் மரணம் குறித்து அவரது காதலியும், ஒலிம்பிக் சைக்கிள் பந்தயத்தில் பதக்கம் வென்றவருமான கேட்டி ஆர்க்கிபால்ட் கூறும்போது, “நான் முயற்சித்தேன்.. முயற்சித்தேன்... மருத்துவர்களும் சில நிமிடங்களில் வந்தனர். ஆனால், அவரின் இதயம் நின்றுவிட்டது. மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. நானும் இத்துடன் முடிந்துவிட்டேன். நான் அவரை மிகவும் நேசித்தேன். எனக்கு அவர் மீண்டும் வேண்டும். அவர் சென்றுவிட்டார். என்னால் இந்த வலியை விவரிக்க முடியவில்லை” என்றார்.

முதற்கட்ட மருத்துவ அறிக்கையில் ரப் வார்டெல் மரணத்திற்கு மாரடைப்பு காரணமாக கூறப்பட்டுள்ளது. ரப் வார்டெல் மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரப் வார்டெல்லின் திடீர் விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in