

சிரியாவின் வடக்கு அலிப்போ மாகாணத்தில் தால்ட்தனா கிராமம் உள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளின் சொர்க்கபுரியான அல்-பாப் மற்றும் தாபிக் ஆகிய நகரங்களுக்கு மத்தியில் இக்கிராமம் உள்ளது.
ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கிராமத்தைத் துருக்கியின் துணையுடன் புரட்சிப்படையினரும் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இக்கிராமத்தைக் குறிவைத்து நேற்று கடுமையான வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 3 குழந்தை கள் உட்பட பொதுமக்கள் 19 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் இந்த தாக்குதலை நடத்தினார்களா அல்லது, சிரிய புரட்சிப் படையினருடன் இணைந்து இப்பகுதிகளில் தீவிர வாதிகளுக்கு எதிரான தாக்குதலைத் தொடுத்துவரும் துருக்கிப் படையினர் வான் வழித் தாக்கு தல் நடத்தினார்களா என்பது தெரியவில்லை.