

அமெரிக்காவின் மிச்சிகன் நகர மேயர் தேர்தலில் 71 வயது இந்திய வம்சாவளி அமெரிக்கர் டாக்டர் சையத் தாஜ் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் நான்கு ஆண்டு களுக்கு முன் நடந்த பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்ட தாஜ், அதில் தோல்வியடைந்தார். தற்போது மிச்சிகன் நகர மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். நவம்பர் 8-ல் நடக்கும் அதிபர் தேர்தலில்போது மேயர் பதவிக் கான தேர்தலும் நடக்கிறது.
இதில் தாஜ் வெற்றிப் பெற்றால், மிச்சிகன் நகரத்தின் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்க மேயர் என்ற பெருமை பெறுவார். இந்தியாவின் பிஹார் மாநிலத் தில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த தாஜ், கடந்த 1982-ல் தனது மனைவியுடன் மிச்சிகனுக்கு குடிபெயர்ந்தார்.