Published : 24 Aug 2022 08:30 PM
Last Updated : 24 Aug 2022 08:30 PM

பிரேசிலின் 200-வது சுதந்திர தினம்: போர்ச்சுக்கல்லில் இருந்து வந்த முதல் மன்னரின் இதயம்

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் 200-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் முதல் மன்னரான பெட்ரோவின் இதயம் அந்நாட்டுக்கு போர்ச்சுக்கலில் இருந்து வந்தடைந்தது.

போர்ச்சுக்கீசிய நாட்டின் கீழ் அடிமைப்பட்டு இருந்த பிரேசிலுக்கு போர்ச்சுக்கீசிய மன்னர் டாம் பெட்ரோ 1822-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி சுதந்திரம் வழங்கினார். அன்றிலிருந்து ‘பிரேசில் - போர்ச்சுக்கீஸ்’ என இரு நாடுகளிலும் போற்றப்படக் கூடிய மன்னராக பெட்ரோ கொண்டாடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், 1834-ஆம் ஆண்டு இறந்த பெட்ரோவின் இதயம் கிட்டதட்ட போர்ச்சுக்கீசிய நாட்டில் உள்ள தேவாலயத்தின் தங்க கலசத்தில் ஃபார்மால்டிஹைட் என்ற வேதிப்பொருளை நிரப்பி பாதுகாக்கப்படுகிறது.

இந்த இதயம் வருடம்தோறும் பிரேசிலின் சுதந்திர தினமான செப்டம்பர் 7-ம் தேசிய அன்று பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனை பாரம்பரிய வழக்கமாக இரு நாடுகளும் கடைப்பிடித்து வருகின்றன. அந்த வகையில் சுதந்திர தினத்திற்கு சில வாரம் உள்ள நிலையில், பிரேசிலுக்கு மன்னர் டாம் பெட்ரோவின் இதயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை பிரேசில் வந்தடைந்த டாம் பெட்ரோவின் இதயத்துக்கு ராணுவ மரியாதை வழங்கப்பட்டது. பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா அதனை பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் வானவேடிக்கைகளும் நடத்தப்பட்டன.

இதுகுறித்து பிரேசில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆலன் கூறும்போது, “இந்த நிகழ்வின் மூலம் பெட்ரோ எங்களுடன் உயிருடன் இருப்பதை போல் உணர்கிறோம்” என்றார். செப்டம்பர் 7-ம் தேதிவரை பெட்ரோவின் இதயம் பிரேசிலில் இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x