பாடப் புத்தகத்தில் சர்ச்சை வரைபடங்கள் - 27 கல்வி அதிகாரிகள் மீது சீன அரசு நடவடிக்கை

பாடப் புத்தகத்தில் சர்ச்சை வரைபடங்கள் - 27 கல்வி அதிகாரிகள் மீது சீன அரசு நடவடிக்கை
Updated on
1 min read

பெய்ஜிங்: சீன பள்ளி பாடப் புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வரைபடங்கள் இடம்பெற்றதால் கல்வி அதிகாரிகள் 27 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஆரம்ப கல்வி கணித புத்தகங்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்டன. இது சீனா முழுவதும் உள்ள ஆரம்ப பள்ளிகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் சில வரைபடங்கள் இடம் பெற்றுள்ளன. அதன் தோற்றம் சீன குழந்தைகள் போல் இல்லை. படங்கள் அழகாக இல்லாமல் அசிங்கமாக இருந்துள்ளன. ஒரு வரைபடத்தில் சிறுவர்கள், சிறுமிகளின் உடையை இழுப்பது போன்றும், ஒரு குழந்தையின் காலில் பச்சை குத்தப்பட்டுள்ளது போன்றும் வரைபடங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக புத்தகத்தில் இடம் பெற்ற இந்த வரைபடங்கள் பற்றி சர்ச்சை எதுவும் எழாமல் இருந்தது.

இந்நிலையில் ஆசிரியர் ஒருவர், பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள வரைபடங்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டு விமர்சித்திருந்தார். இந்த படங்கள் கலாச்சார சீரழிவு எனவும், அமெரிக்க கலாச்சாரம் போல் உள்ளது எனவும் விமர்சிக்கப்பட்டதால், சமூக ஊடகங்களில் இந்த வரைபடங்கள் வைரலாக பரவின.

இதனால் சீன அரசு தற்போது இது குறித்து விசாரணை நடத்தி, இதற்கு காரணமான கல்வித்துறை அதிகாரிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது. மொத்தம் 27 அதிகாரிகள், கடமை தவறி பொறுப்பின்றி செயல்பட்டதாக கூறி அவர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பாடபுத்தகங்கள் வடிவமைப்பு பணியில் இவர்கள் இனிமேல் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என சீன கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in