Published : 09 Jun 2014 12:00 AM
Last Updated : 09 Jun 2014 12:00 AM

சீன வெளியுறவு அமைச்சர் சுஷ்மாவுடன் சந்திப்பு

சீன வெளியுறவுத்துறை அமைச் சர் வாங் யி, டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை ஞாயிற்றுக் கிழமை சந்தித்துப் பேசினார்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின் சிறப்புத் தூதராக, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி ஞாயிற்றுக்கிழமை டெல்லி வந்தார். பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இருதரப்பு நட்புறவை வலுப்படுத் தும் நோக்குடன் அவர் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.

வர்த்தகம், தொழில் முதலீடு உள்ளிட்டவை குறித்து வாங் யி, சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இரு நாடுகளின் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இக் கூட்டம் சுமுகமாகவும், ஆக்கப் பூர்வமாகவும் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக இருக்கும் எல்லைப் பிரச்சினை, ஊடுருவல், குறிப்பிட்ட சில பகுதிகளைச் சேர்ந்த இந்தியர் களுக்கு தனி விசா வழங்கும் சீனாவின் செயல், பிரம்மபுத்திரா நதியில் சீன அரசு அணை கட்டுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. தீவிரவாதத்திற்கு எதிரான நட வடிக்கை குறித்தும், இந்தியாவில் சீன முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப் பட்டது. இரு நாடுகளின் தலைவர் களும் சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதிக் கப்பட்டது” என்றார்

முன்னதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி கூறுகையில், “இந்தியாவில் நடைபெற்று வரும் மாற்றங்களை (மோடி பதவியேற்புக்குப் பிறகு) சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. வளர்ச்சிப் பாதையில் செல்வது தொடர்பாக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே பல பொது அம்சங்கள் உள்ளன. இந்தியாவில் புதிதாக பதவியேற்றுள்ள அரசுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும், பிரதமர் நரேந்திர மோடியையும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இன்று சந்திக்கவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x