இராக்கில் 2-வது நாளாக சண்டை

இராக்கில் 2-வது நாளாக சண்டை
Updated on
1 min read

இராக்கின் 2 வது மிகப்பெரிய நகரமான மொசுல், கடந்த 2014-ல் ஐஎஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. இதையடுத்து நாட்டின் பிற பகுதிகளையும் கைப்பற்ற ஐஎஸ் மேற் கொண்ட முயற்சியை ராணுவம் முறியடித்தது. இப்போது, மொசுல் நகரை மீட்க ராணுவம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக இந்த நகரத்தை ராணுவம் சுற்றி வளைத்தது. சுமார் 3 லட்சம் வீரர்கள் ஆயுதங் களுடன் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், மொசுல் நகரை மீட்க போர் தொடங்குவதாக அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார். இதையடுத்து, 2-வது நாளான நேற்று மொசுல் நகரை நோக்கி ராணுவ டாங்கிகள் மற்றும் வீரர்கள் படிப்படியாக முன்னேறிச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in