Published : 05 Oct 2016 10:31 AM
Last Updated : 05 Oct 2016 10:31 AM

உலக மசாலா: மணப்பெண்ணை கீழே தள்ளிய குதிரை!

தேவதைக் கதைகளில் வரும் திருமணம் போல் தங்களின் திருமணமும் அமைய வேண்டும் என்று பலரும் நினைக் கிறார்கள். அதன் ஒருபகுதியாக விதவிதமான இடங்களில் புகைப் படங்கள் எடுப்பது உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. நியு ஜெர்ஸியைச் சேர்ந்த சூ அலெக்ரெட்டாவும் புகைப்படங்கள் எடுப்பதற்காக, குதிரையில் ஏறினார்.

கருப்புக் குதிரையில் வெள்ளை ஆடை அணிந்து, கையில் மலர்க்கொத்துடன் காட்சியளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று குதிரை கீழே தள்ளிவிட்டது. தலைகுப்புற தண்ணீரில் விழுந்தார். எல்லோரும் அதிர்ந்து போனார் கள். ‘‘என் திருமணம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவ மாக இருக்க வேண்டும் என்று நினைத்து, இப்படிப் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டேன். எதிர்பாராமல் கீழே விழுந்ததில், என் மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. நான் நினைத்தது போல என் வாழ்நாளில் இதை மறக்க முடியாது’’ என்கிறார் சூ அலெக்ரெட்டா.

ஐயோ, பாவம்!

ஆஸ்திரேலியாவில் உள்ள யூகலிப்டஸ் மரங்கள் மிக உயரமாக வளர் கின்றன. உலகிலேயே அதிக உயரம் வளரக்கூடிய வட அமெரிக்கா வின் செங்காலி மரத்துக்குப் போட்டியாக வளர்ந்து வருகின்றன. யூகலிப்டஸ் மரங்களில் 700 இனங்கள் உள்ளன. பொதுவாக 85 மீட்டர் உயரத்துக்கு வளரக்கூடிய யூகலிப்டஸ் மரம், பூக்கக்கூடிய மரங்களில் மிக உயரமானது என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறது. டாஸ்மேனியா வில் உள்ள ஒரு யூகலிப்டஸ் மரம் 99.6 மீட்டர் உயரம் வளர்ந் திருக்கிறது! இன்னும் 15 மீட்டர்கள் வளர்ந்தால், இன்று மிக உயர மாகக் கருதப்படும் ஹைபீரியன் செங்காலி மரத்தை எட்டிப் பிடித்து விடும். உலகின் பல பகுதிகளில் இருக்கும் யூகலிப்டஸ் மரங்கள், முழு வாழ்நாளையும் வாழ்வதற்கு வாய்ப்பு கொடுக்காமல், வெட்டி விடுகிறார்கள். ஆனால் டாஸ்மேனியாவில் 400 ஆண்டுகள் வரை கூட யூகலிப்டஸ் மரங்கள் வாழ்கின்றன. முதல் 90 ஆண்டுகள் வரையே யூகலிப்டஸ் வேகமாக வளர்கிறது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி குறைந்துகொண்டே வருகிறது. ஒருகட்டத்தில் நோய் வந்தோ, மனிதர்களால் வெட்டப்பட்டோ வாழ்நாளை முடித்துக் கொள்கிறது. மரங்களை மனிதர்கள் வெட்டாமல், முழு வாழ்நாளையும் வாழ அனுமதித்தால், செங்காலி மரத்தின் உயரத்தை யூகலிப்டஸ் ஒருநாள் தொட்டுவிடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

யூகலிப்டஸ் மரங்களை முழுமையாக வாழ அனுமதிப்போம்!

ஜப்பானைச் சேர்ந்த யமமோடோ நிறுவனம் பல்வேறு வாசனைத் திரவியங்களை உருவாக்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஷிகிபோ தொழில்நுட்ப நிறுவனத்துடன் சேர்ந்து ‘டியோ-மேஜிக்’ என்ற பெயரில் துர்நாற்றம் வீசக்கூடிய விஷயங்களில் நறுமணத்தைக் கொண்டு வரும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. முதல் முயற்சியாக குழந்தைகளின் டயாபர்களில் நறுமணத்தைச் சேர்த்தது.

தற்போது ஒசாகாவில் உள்ள கழிவுநீர் அகற்றும் வண்டிகளில், நறுமணத்தைக் கொண்டு வந்திருக்கிறது. கழிவுநீர் அகற்றும் வண்டிகளைக் கண்டால் பொதுமக்கள் முகம் சுளிப்பார்கள். அந்த வண்டி ஓட்டுநர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவார்கள். இந்தப் பிரச்சினையைத் தற்போது டியோ மேஜிக் நறுமண திரவியம் தீர்த்து வைத்திருக்கிறது. எரிபொருளில் சாக்லெட் நறுமணத்தைச் சேர்த்திருக்கிறது. இதனால் கழிவுநீர் வாகனம் செல்லும்போது, துர்நாற்றத்துக்குப் பதில் சாக்லெட் மணம் பரவுகிறது.

இனி, மூக்கை மூட வேண்டியதில்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x