

அரசு திட்டங்கள் மற்றும் சேவைகளை மொபைல் போன் மூலம் வழங்கியதற்காக இந்திய அரசுக்கு ஐ.நா.வின் பப்ளிக் சர்வீஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் எலெக்ட்ரா னிக்ஸ் மற்றும் தகவல் தொடர்புத் துறை, இந்த மொபைல் சேவையை நாடு முழுவதும் செயல்படுத்தியது. நாட்டின் அனைத்து பகுதிகளுக் கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு சேவைகள் சென்றடைவது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் சிறந்த மக்கள் சேவையை பாராட்டும் வகையில், 2014-ம் ஆண்டின் ஐ.நா.வின் பப்ளிக் சர்வீஸ் விருதுக்கான 2-வது வெற்றியாளர்களாக பஹ்ரைன், பிரேசில், கேமரூன், தென் கொரியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் இந்தியாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரியா, பிரேசில், மொராக்கோ, ஓமன், சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடு கள் முதலிடத்தை பெற்றுள்ளன.
ஐ.நா. அமைப்புகளுடன் இணைந்து தென் கொரிய அரசு இவ்விருதை வழங்குகிறது. இதை யொட்டி சியோல் நகரில் வரும் 26-ம் தேதி நடைபெறும் விழாவில் இந்நாடுகள் கௌரவிக் கப்பட உள்ளன. ஜூன் 23-ம் தேதியை அரசு சேவை நாளாக ஐ.நா. பொதுச் சபை 2003-ல் அறிவித்தது. இதையொட்டி இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.