Last Updated : 31 Oct, 2016 07:52 AM

 

Published : 31 Oct 2016 07:52 AM
Last Updated : 31 Oct 2016 07:52 AM

கண்ணைப் பறிக்கும் மின் விளக்கு அலங்காரத்துடன் முதல்முறையாக ஐநா-வில் தீபாவளி

ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக தீபாவளி பண்டிகை உற்சாகமாக அனுசரிக்கப்பட்டது.

ஐநாவுக்கான இந்திய தூதர் சையது அக்பருத்தின் இதுகுறித்து ‘ட்விட்டர்’ வலை தளத்தில் வெளி யிட்ட தகவலில்,

‘ஐக்கிய நாடுகள் சபையில் முதல்முறையாக தீபாவளிக்கான தீபச் சுடர்கள் மின்னுகின்றன. இருள் விலகி வெளிச்சம் பரவவும், விரக்தி நிலை மாறி நம்பிக்கை துளிர்விடவும், அறியாமை நீங்கி அறிவு நிறையவும், தீமை ஒழிந்து நன்மை பிறக்கவும் ஐநாவில் தீப ஒளி ஏற்றப்பட்டுள்ளது. இம் முயற்சிக்காக ஐநா பொதுச் சபை யின் தலைவர் பீட்டர் தாம்சனுக்கு நன்றி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளித் திருநாளையொட்டி, நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகக் கட்டிடம் கண்ணைப் பறிக்கும் வகையில் மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த 29-ம் தேதி முதல் 31-ம் தேதி (இன்று) வரை ஐநா கட்டிடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீபாவளித் திருநாளின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐநாவின் உறுப்பினர் நாடுகள் பலவற்றில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், அன்றைய தினத்தில் அலுவல் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறும் அதி காரப்பூர்வமாக அறிவுறுத்தப் பட்டது.

இந்தாண்டு முதல், தீபாவளி யன்று விருப்ப விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல்முறை யாக தீபாவளியைக் கொண்டாடும் விதமாக ஐநா தலைமையகத்தின் கட்டிடத்தில் தீபாவளி வாழ்த்துச் செய்தியுடன், தீப விளக்கு எரியும் படத்துடன் கூடிய அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஐநா தலைமையகம் மட்டு மின்றி, டெல்லி உட்பட பல்வேறு இடங்களில் உள்ள ஐநா அலு வலகங்களிலும் தீபாவளி பண்டிகை யின் உற்சாகம் வெளிப்பட்டது. கடந்த ஜூன் மாதம், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டும், ஐநா தலைமையகக் கட்டிடம் யோகாசன படங்களுடன் அலங்கரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x