‘இந்தியத் தலைவர் மீது தாக்குதல் நடத்த சதி’ - ரஷ்யாவில் ஐஎஸ் தீவிரவாதி கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மாஸ்கோ: இந்தியாவின் மிக முக்கியப் பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் சதித் திட்டம் தீட்டியிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படை தீவிரவாதியை கைது செய்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எஃப்எஸ்பி (FSB) வெளியிட்டுள்ள தகவலில், "மத்திய ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளோம். அந்த நபர் ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர், இந்தியத் தலைவர் ஒருவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

அந்த நபர் ஆளுங்கட்சி வட்டாரத்துடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளது. அவரை கொலை செய்வதற்காகவே இந்த நபரை துருக்கியைச் சேர்ந்த சிலர் பயிற்சி கொடுத்து தயார் செய்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஐஎஸ் அமைப்பு மற்றும் அத்துடன் தொடர்புடைய அனைத்திற்கும் தடை இருக்கிறது. தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் முதல் பட்டியலின்படி இந்தத் தடை அமலில் இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in