

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி 1910 முதல் 1914 வரை வசித்த டால்ஸ்டாய் பண்ணையை (டால்ஸ்டாய் ஃபார்ம்) புதுப்பிக்கும் திட்டத்துக்கு மத்தியப் பிரதேச அரசு ரூ.1 கோடி வழங்கவுள்ளது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், செவ்வாய்க்கிழமை டால்ஸ்டாய் பண்ணைக்குச் சென்று பார்வையிட்டார்.
அங்கு மண்ணை தொட்டு வணங்கிய சவுகான், காந்தியின் கொள்கைகளை நினைவுகூர்ந்தார்.
முதலீடுகளை ஈர்க்கவும், தென்னாப்பிரிக்க அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து தொழில் திட்டங்களை தொடங்கும் வகையிலும், சிவராஜ் சிங் சவுகான் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளார். அவருடன் உயர்
நிலைக்குழு ஒன்றும் சென்றுள் ளது.
இந்நிலையில் டால்ஸ்டாய் பண்ணையில், உள்ளூர் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நினைவுப் பூங்கா உருவாக்
கும் திட்டத்தை தென்னாப்பிரிக்கா வுக்கான இந்தியத் தூதர் வீரேந்திர குப்தா தொடங்கியுள்ளார்.
இத்திட்டத்துக்கு மத்தியப் பிரதேச அரசு சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாக சவுகான் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து 1914-ல் காந்தி தாயகம் திரும்பினார். இதன் நூற்றாண்டு விழா டால்ஸ்டாய் பண்ணையில் வரும் ஜூலை 20-ம் தேதி நடைபெற உள்ளது.