

பாகிஸ்தானில் கடந்த 2014-ல் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கானும், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சியின் தலைவரும், மதத் தலைவருமான தாஹிர் உல் கத்ரியும் இணைந்து பிரதமர் பதவியில் இருந்து நவாஸ் விலகக் கோரி முழக்கம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து இரு தலைவர்களின் ஆதரவாளர்கள் 500 பேர் பாகிஸ்தான் தொலைக்காட்சி (பிடிவி) தலைமையகத்துக்குள் நுழைந்து கண்ணில் கண்ட பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கினர்.
இந்த வன்முறை தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கவுசர் அப்பாஸ் ஜைதி வன்முறையை தூண்டி விட்டதற்காக இம்ரான் கான் மற்றும் தாஹிர் உல் கத்ரியை கைது செய்யும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.