

பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதல்களில் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானில் பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வசிக் கும் வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் புதன்கிழமை இரவு அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தரப்பில் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதே பகுதியில் வியாழக்கிழமை யும் சி.ஐ.ஏ. அமைப்பினர் ஆளில்லா விமான தாக்குதலை நடத்தினர். இதில் 10 தீவிரவாதிகள் உயிரிழந் தனர். அடுத்தடுத்து நடத்தப்பட்ட 2 தாக்குதல்களில் மொத்தம் 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் அண்மையில் நடத் திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து தீவிரவாதி களைக் குறிவைத்து சி.ஐ.ஏ. தாக்குதல் நடத்தி உள்ளது.