சல்மா அல்-ஷெகாப்
சல்மா அல்-ஷெகாப்

ட்விட்டரில் வதந்தி பரப்பியதாக சவுதி ஆராய்ச்சி மாணவிக்கு 34 ஆண்டு சிறை தண்டனை

Published on

துபாய்: சவுதியைச் சேர்ந்தவர் சல்மா அல்-ஷெகாப். பிரிட்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியில் இறுதி யாண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சிறுபான்மை ஷியா முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த சல்மா, சவுதியின் சன்னி முஸ்லிம் ராஜ் ஜியத்தில் உள்ள பாகுபாடுகள் பற்றி குறை கூறி வந்தார்.

இந்நிலையில் சவுதி அரசுக்கு எதிராக ட்விட்டரில் வதந்திகளை பரப்பியதாக சல்மா மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்தாண்டு ஜனவரி மாதம் விடுமுறையில் சல்மா சவுதி வந்தபோது, கைது செய்யப்பட்டார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு முன்பாக 285 நாட்கள் தனிமை சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

அதன் பின் இவர் மீதான வழக்கு நீதிமன்றத் துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கில் சல்மாவுக்கு 34 ஆண்டு சிறை தண்டனையும், அதன்பின் 34 ஆண்டுகள் பயண தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in