காஷ்மீர் பிரச்சினை இந்தியா-பாக். சம்பந்தப்பட்டது: பிரிட்டன் பிரதமர் தெரசா மே திட்டவட்டம்

காஷ்மீர் பிரச்சினை இந்தியா-பாக். சம்பந்தப்பட்டது: பிரிட்டன் பிரதமர் தெரசா மே திட்டவட்டம்
Updated on
1 min read

‘காஷ்மீர் விவகாரத்தில் பிரிட்ட னின் நிலைப்பாட்டில் எந்த மாற்ற மும் இல்லை. இந்தியா பாகிஸ் தான் இடையிலான இருதரப்பு விவகாரமான காஷ்மீர் பிரச் சினையை அவ்விரு நாடுகளும் தான் பேசித் திர்த்துக்கொள்ள வேண்டும்’ என, பிரிட்டன் பிரதமர் தெரசா மே கூறியுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே, அடுத்த மாதம் 6-ம் தேதி இந்தியா வரவுள்ளார். அப்போது இந்திய தரப்புடனான பேச்சுவார்த்தையில், காஷ்மீர் பிரச்சினை இடம் பெறுமா என்பது குறித்து, பிரிட்டன் மக்கள வையில் கேள்வி நேரத்தின் போது, தொழிலாளர் கட்சி உறுப் பினர் யாஸ்மின் குரேஷி கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தானில் பிறந்தவரான யாஸ்மினின் கேள்விக்கு பிரதமர் தெரசா பதில் அளிக்கும்போது, ‘காஷ்மீர் பிரச்சினையை பொறுத்த வரை, அது இந்தியாவும், பாகிஸ் தானும் பேசித் தீர்க்க வேண்டிய இருதரப்பு விவகாரம்.

இவ்விஷயத்தில், பிரிட்டனின் தற்போதைய ஆட்சி பொறுப் பேற்றதில் இருந்தும், அதற்கு முன்பும் என்ன நிலைப்பாட்டை நாம் எடுத்திருந்தோமோ அதுவே இப்போதும் தொடர்கிறது’ என்றார்.

இதன் மூலம், தனது இந்திய பயணத்தின்போது, பிரதமர் மோடி யுடன் காஷ்மீர் விவகாரம் தொடர் பாக எவ்வித சமரசப் பேச்சு வார்த்தையோ, மத்தியஸ்த முயற் சியோ மேற்கொள்ளப் போவ தில்லை என்பதை தெரசா திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வசிக்கும் பால்டன் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவ ரான குரேஷி, காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை உள்ளிட்டவை குறித்து தன்னுடனும், அனைத்துக் கட்சி உறுப்பினர்களுடனும் விவா தித்து, அதன் அடிப்படையில் பிரதமர் மோடியிடம் இப்பிரச் சினையை எழுப்ப வேண்டும் என தனது கேள்வியில் குறிப் பிட்டிருந்தார்.

தீபாவளி வாழ்த்து

முன்னதாக, தீபாவளித் திரு நாளை முன்னிட்டு, மக்களவையில் தெரசா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், பிரிட்டன் வாழ் இந்தியர்களின் திறமைகளை யும், சாதனைகளையும் வெகுவாக புகழ்ந்தார். இந்திய பயணத்தின் போது, பிரிட்டன் வாழ் இந்தி யர்களின் வெற்றிகரமான சமூக பங்களிப்பை இந்தியாவுக்கு தெரி யப்படுத்தப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in