லண்டன் வீதிகளில் உலாவும் துபாய் இளவரசர்: வைரலாகும் புகைப்படங்கள்

லண்டன் வீதிகளில் உலாவும் துபாய் இளவரசர்: வைரலாகும் புகைப்படங்கள்
Updated on
1 min read

லண்டன்: ஐக்கிய அமீரகத்தின் இளவரசரான ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்தும் லண்டனில் தெருக்களிலும், பொதுப் போக்குவரத்துகளிலும் சுற்றித் திரியும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மன்னர்கள், இளவரசர்கள் என்றால் பொது உலகப் பார்வையில் ஒரு பிம்பம் எப்போதும் தோன்றும். அதனை உடைப்பதற்கான நடவடிக்கைகளில் சில அரபு நாடுகள் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ஐக்கிய அரபு அமீரகம். இங்கு மற்ற அரபு நாடுகளை ஒப்பிடும்போது கட்டுப்பாடுகள் குறைவு என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில், ஐக்கிய அமீரகத்தின் இளவரசரான ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்தும் தனது அரசுக் குடும்பம் தொடர்பான சில வரைமுறைகளை அவ்வப்போது தகர்த்து நவீன நாகரிக உடைகளில் வலம் வருபவர்.

அந்த வகையில் ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்தும் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து லண்டனுக்கு சுற்றுப் பயணம் சென்றிருக்கிறார். அங்கு அவர் பொதுமக்கள் மத்தியில் சாதாரண உடைகளில் உலாவும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இப்புகைப்படங்களை இளவரசரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போது அந்தப் புகைப்படங்கள்தான் வைரலாகி வருகின்றன.

ஷேக் ஹம்தன் பின் முகமத் அல் மக்துமை இன்ஸ்டாவில் 14 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in