

அமெரிக்க முன்னாள் அதிபரான பில் கிளிண்டனை "பில் வாங்க போகலாம், நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும்" என்று இரு முறை கைத்தட்டி அழைத்தார் ஒபாமா.
இஸ்ரேல் முன்னாள் அதிபர் ஷிமோன் பெரஸின் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பில் கிளிண்டனும் கலந்து கொண்டனர்.
இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட பிறகு அமெரிக்கா செல்வதற்கான விமானத்தின் வாசலில் ஒபாமா நின்று கொண்டிருக்க, பில் கிளிண்டன் தரை தளத்தில் இஸ்ரேல் அதிகாரிகளுடன் வெகு நேரமாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் பொறுமையிழந்த ஒபாமா தனது இரு கைகளை வேகமாகத் தட்டி "பில் வாங்க போகலாம், நான் வீட்டுக்குச் செல்ல வேண்டும்" என்று இரு முறை கூறினார்.
ஒபாமாவின் கை தட்டல் கேட்டதும் பில் கிளிண்டன் வேகமாக படிக்கட்டுகளில் ஏறி ஒபாமாவின் முதுகில் தட்டினார். பின்னர் இருவரும் விமானத்தின் உள்ளே சென்றனர்.
ஒபாமா, பில் கிளிண்டன் பேசிக் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.