ஸ்காட்லாந்தில் பெண்களுக்கு நாப்கின் இலவசம்

சமூக நீதி செயலர் ஷோனா ராபின்சன்
சமூக நீதி செயலர் ஷோனா ராபின்சன்
Updated on
1 min read

எடின்பர்க்: உலகிலேயே முதல் முறையாக, மாதவிடாய் தயாரிப்புகள் மசோதா ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2020 நவம்பரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

இந்நிலையில், ஸ்காட்லாந்து அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், "மாதவிடாய் பொருட்கள் தேவைப்படும் அனைவருக்கும் கவுன்சில்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அவற்றை இலவசமாக கிடைக்க ஆவன செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள கழிவறைகளில் சுகாதாரப் பொருட்களை இலவசமாக வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக நீதி செயலர் ஷோனா ராபின்சன் கூறும்போது, “அனைத்து பெண்களுக்கும் நாப்கின்கள் உட்பட மாதவிடாய் பொருட்களை இலவசமாக வழங்க முடிவெடுத்திருப்பது சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான அடிப்படை உரிமையை நிலைநாட்டுவதாக உள்ளது. மேலும், பெண்களுக்கு இந்த பொருட்களை அணுகுவதில் உள்ள நிதி சார்ந்த தடைகளையும் இது அகற்றும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in