

அமெரிக்கா அட்லாண்டாவில் உலகக் கோப்பை மணல் சிற்பப் போட்டி-2014 நடைபெற்றது. இதில், இந்தியரான சுதர்சன் பட்நாயக் “மரங்களைக் காப்போம், வருங் காலம் காப்போம்” என்ற தலைப்பில் மணல்சிற்பம் வடித்திருந் தார். இந்த சிற்பத்துக்கு ‘மக்களின் விருப்பத்துக்குரிய சிற்பம்’ விருது கிடைத்துள்ளது.
பட்நாயக்குக்கு, அட்லாண்டா மேயர் விருதை வழங்கினார். இது தொடர்பாக சுதர்சன் பட்நாயக் கூறு கையில், “நம் நாட்டுக்காக இவ் விருதை வென்றதில் மிகவும் பெருமையடைகிறேன். என் சிற்பத்தை ரசித்தவர்களுக்கும், வெற்றி பெறச் செய்தவர்களுக்காக வாக்களித்தவர்களுக்கும் நன்றி” என்றார்.
இப்போட்டியில் உலகில் பிரசித்தி பெற்ற 20 மணல் சிற்பக் கலைஞர்கள் பங்கேற்றனர். கடந்த 19-ம் தேதி இப்போட்டி தொடங் கியது. ஒவ்வொரு கலைஞரும் 30 மணி நேரம் உழைத்து 10 டன் மணலைப் பயன்படுத்தி இச்சிற்பங்களை வடிவமைத்தனர்.
இரட்டையர் பிரிவில், சுதர்சன் பட்நாயக் அமெரிக்க சிற்பக் கலைஞர் மாத்யூ ராய் டியபெர்ட் இணைந்து பங்கேற்றனர். இவர்கள் வடிவமைத்த தாஜ்மஹால் சிற்பம் 5-வது இடத்தைப் பிடித்தது.