சமூக நீதியுடன் அமைதியே நாங்கள் விரும்பும் பரிசு: கொலம்பிய போராளித் தலைவர் அறிவிப்பு

சமூக நீதியுடன் அமைதியே நாங்கள் விரும்பும் பரிசு: கொலம்பிய போராளித் தலைவர் அறிவிப்பு
Updated on
1 min read

கொலம்பியாவில் 50 ஆண்டுகாலமாக ஏகாதிபத்தியத்தையும், உள்நாட்டு மேட்டுக்குடி நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்து போராடி வரும் கொலம்பிய புரட்சிகர ஆயுதப்படை-மக்கள் ராணுவ (FARC) அமைப்பின் தலைவர், அதிபர் சாண்டோஸுக்கு அளித்த நோபல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு இன்று கொலம்பிய அதிபர் யுவான் மேனுவெல் சாண்டோஸுக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஆனால் ஃபார்க் போராட்டக்குழு அமைப்பின் தலைவர் வேறு விதமாகக் கூறியுள்ளார்.

இது குறித்து FARC போராட்ட அமைப்பின் தலைவர் ரோட்ரிகோ லண்டோனோ என்ற இயற்பெயரைக் கொண்ட டிமோலியன் ஜிமேனேஸ் தனது ட்விட்டரில் கூறும்போது.

“நாங்கள் அடைய விரும்பும் பரிசு, கொலம்பியாவுக்கு அமைதியுடன் கூடிய சமூக நீதிதான். அதாவது வலதுசாரி துணை ராணுவப்படையினர் இல்லாத, இடது சாரி போராளிகளை அழித்தொழிக்கும் செயல்களற்ற, கட்டவிழ்த்துவிடப்படும் பொய்களற்ற அமைதியுடன் கூடிய சமூக நீதியே நாங்கள் நாடி விரும்பும் பரிசு. தெருக்களில் அமைதி நிலவ வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in