Last Updated : 14 Oct, 2016 06:41 PM

 

Published : 14 Oct 2016 06:41 PM
Last Updated : 14 Oct 2016 06:41 PM

தாய்லாந்து மன்னர் அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்- ஒபாமா புகழஞ்சலி

உடல் நலபாதிப்பால் மரணம் அடைந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெஜ், அமெரிக்காவின் நெருங்கிய நண்பர் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா புகழஞ்சலி சூட்டியுள்ளார்.

தாய்லாந்து மக்களின் அன்பைப் பெற்ற மன்னர் பூமிபால் அதுல்யாதெஜ் வியாழக்கிழமை உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88.

பூமிபாலின் இறப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று தனது வருத்தத்தை பதிவுச் செய்தார். மேலும் ஒபாமா தெரிவித்த இரங்கல் செய்தியில், "தாய்லாந்தின் முன்னேற்றத்துக்கு ஓய்வில்லாமல் உழைத்தவர் பூமிபால். அவருடைய மாயாஜாலமான ஆட்சியால் அமெரிக்காவின் நெருங்கிய நண்பராக இருந்தவர் பூமிபால் அதுல்யாதெஜ். 2012ஆம் ஆண்டு தாய்லாந்து சுற்றுப் பயணத்தில் அவரை சந்தித்த நினைவுகள் இன்னும் என்னிடம் உள்ளன என்றார்.

தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெஜின் மரணத்துக்கு ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

உலகில் நீண்டகாலம் அரியணையில் வீற்றிருந்த மன்னர் என்ற பெருமையைப் பெற்றவர்:

சாக்ரி வம்சத்தின் 9-வது மன்னரான பூமிபால், 9-வது ராமா என்றும் அழைக்கப்படுகிறார். 1946-ம் ஆண்டு தனது சகோதரர் மறைவைத் தொடர்ந்து அரியணை ஏறினார். 70 ஆண்டுகால ஆட்சியில் நாட்டை ஒன்றுபடுத்திய சக்தியாக பூமிபால் கருதப்படுகிறார். தாய்லாந்து சிக்கலான தருணங்களைச் சந்தித்தபோது, தலையிட்டு நாட்டை நல்வழிப்படுத்தியுள்ளார்.

மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யாதெஜ்

பூமிபால் மறைவை தொடர்ந்து 64 வயது பட்டத்து இளவரசர் மகா வஜ்ரலாங்கோன் மன்னராக முடிசூட்டிக் கொள்வார் என பிரதமர் பிரயூத் சான்-ஓச்சா அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x