

ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் சியோதா என்ற இடத்தில் பிரம்மாண்டமான யாசுகுனி போர் நினைவிடம் உள்ளது. போரினால் உயிரிழந்த 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் விலங்குகளின் விவரங்கள் இந்த நினைவிடத்தில் பதியப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டுள்ளது.
20-ம் நூற்றாண்டின் முதல் பகு தியில், ஜப்பானின் காலனியாதிக் கம், ராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக் கைகளை புனிதப்படுத்தும் வகை யில் இவ்விடம் அமைக்கப்பட்டிருப்பதாக, ஜப்பானால் பாதிக்கப் பட்ட சீனா, கொரியா போன்ற நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
கடந்த 2013-ம் ஆண்டில் ஜப்பான் பிரதமர் ஷின்சு அபே யாசுகுனி நினைவிடத்துக்குச் சென் றது சர்வதேச அளவில் கடும் விமர் சனத்தை எழுப்பியது. சீனா மற் றும் தென்கொரியா உடனான ராஜ்ஜிய உறவுகளை பாதுகாக்கும் நோக்கில், அதன் பிறகு அங்கு செல் வதை அபே தவிர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் ஜப்பானின் பிரதிநிதிகள் சபை உறுப்பினர் கள் 85 பேர் யாசுகுனி நினைவிடத் துக்கு வந்தனர். இதற்கு சீனாவும், தென்கொரியாவும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
இதைத்தொடர்ந்து, பிரதமர் அபேவுக்கு நெருக்கமானவர் களாக கருதப்படும் அமைச்சர்கள் சனே தகாய்ச்சி மற்றும் கட்சுனோபு கடோ ஆகிய இருவரும் நேற்று யாசுகுனி நினைவிடத்துக்கு வந் திருந்தனர். சீனா மற்றும் தென் கொரியாவை அதிருப்திக்கு உள்ளாக்கும் இந்நடவடிக்கை யால் இம் மூன்று நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பாதிக்கும் சூழல்நிலை உருவாகியுள்ளது.