

ஆப்கனில் முகாமிட்டு தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வந்த, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வாபஸ் பெறப்பட்டது. எனினும், கணிசமான நேட்டோ படையினர் அந்நாட்டு ராணுவத்துக்குத் தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இதனிடையே, தலிபான் தீவிரவாத அமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு காண அந்நாட்டு அரசு முயற்சி மேற்கொண்டது. இந்நிலையில், கடந்த மே மாதம் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் பலியா னார். இதனால் பேச்சுவார்த்தை தடைபட்டது.
இந்நிலையில், கடந்த செப்டம் பர் மாதத்துக்குப் பிறகு தோஹா வில் 2 முறை தலிபான் அமைப் பின் முக்கிய பிரதிநிதிகளுடன் அரசின் உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
ஆனால், இந்த தகவலை தலி பான் அமைப்பின் செய்தித் தொடர் பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஆப்கன் அரசின் உயர் அதிகாரி களை சந்திக்கவும் இல்லை, பேச்சு வார்த்தை நடத்தவும் இல்லை. வெளிநாட்டு படைகள் முழுமை யாக வெளியேற வேண்டும் என்ற எங்கள் நிலைபாட்டில் மாற்றம் இல்லை” என கூறப் பட்டுள்ளது.