Published : 27 Jul 2022 08:45 PM
Last Updated : 27 Jul 2022 08:45 PM

கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூரில் விசா மேலும் 14 நாட்களுக்கு நீட்டிப்பு

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசாவை மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூர் அரசு நீட்டித்துள்ளது. அதன்படி அவர் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை சிங்கப்பூரில் தங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டிடம் புகலிடம் கோராமல் தங்கியிருந்தார். இந்த நிலையில், விசா அடிப்படையிலே தங்குவதற்கு ராஜபக்சேவுக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூலை 14 அன்று மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்சே நகரத்தின் மையத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார் என்றும், தற்போதுதான் அவர் ஒரு தனியார் இல்லத்திற்கு மாறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை அமைச்சரகம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். இதையடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக நேரிட்டது.

முன்னதாக, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்த அவர், மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேந்தெர்டுக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x