

சீனாவில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவால், வியாழக்கிழமை அன்று ஜெஜியாங் மாகாண கிராம மக்கள் 32 பேர் மாயமாகினர்.
மெகி புயலின் காரணமாக சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கனத்த மழை பெய்தது. இதனால் புதன்கிழமை மாலை சுசுன் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 26 கிராம மக்கள் மாயமாகினர். அங்கிருந்த வீடுகள் அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டன.
அதே நேரத்தில் பயோஃபெங் கிராமத்தில் ஏற்பட்ட மற்றொரு நிலச்சரிவால் அங்கு வசித்த 6 பேர் காணாமல் போயினர். அவர்களின் வீடுகளும் அழிந்துவிட்டன.
மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் மாட்டிய சுமார் 15 பேரை மீட்ட நிலையில், உயிருடன் இருப்பவர்களைத் தேடிக் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மெகி புயலால் தைவான் நாட்டில் 4 பேர் பலியாகினர்; 268 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.