பாலிவுட் திரைப்படங்களுக்கு தடை: 70% வரை நஷ்டம் ஏற்படும் என பாகிஸ்தான் திரைத்துறை அச்சம்

பாலிவுட் திரைப்படங்களுக்கு தடை: 70% வரை நஷ்டம் ஏற்படும் என பாகிஸ்தான் திரைத்துறை அச்சம்
Updated on
1 min read

இந்திய பாலிவுட் திரைப்படங்களுக்கு பாகிஸ்தானில் தடை விதித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் திரைத்துறைக்கு 70% வரை நஷ்டம் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

காஷ்மீர் விவகாரம், யூரி தாக்குதல் போன்ற தொடர் பிரச்சினைகளால் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் உறவில் விரிசல் அதிகமாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் பாலிவுட் படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் படங்களுக்கு விதிக்கப்பட்ட தடையினால் பாகிஸ்தான் திரைத் துறைக்கு 70% நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு திரைத் துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாகிஸ்தான் திரைப்படத் துறையின் திரைப்பட விநியோகஸ்தரரும், தயாரிப்பாளருமான நதிம் மண்டிவாலா கூறும்போது, "கடந்த சில வருடங்களாக இந்தியாவின் பாலிவுட் படங்களின் வரவுகளால் மட்டுமே பாகிஸ்தானில் திரைப்படத்துறை உயிர்ப்பித்திருந்தது. இந்தியா-பாகிஸ்தான் உறவில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல் நிரந்தரமானதாக அமைந்து விடாது என்பதில் நம்பிக்கையுள்ளது. இந்த விரிசல் தற்காலிகமானதாக இருந்தால் மட்டுமே பாகிஸ்தான் திரைத் துறைக்கு பாதிப்பு பெரிய அளவு இருக்காது. ஆனால் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான விரிசல் நிரந்தரமானால் பாகிஸ்தானிலுள்ள பல பொழுதுபோக்கு வணிக வளாகங்கள் மூடும் நிலை ஏற்படும்.

பாகிஸ்தான் திரைத் துறையைப் பொறுத்தவரை வெறும் பாகிஸ்தான் திரைப்படங்களைக் கொண்டு இயக்கப்படுவது அல்ல. 50-70 படங்கள் வரை பாலிவுட், ஹாலிவுட் திரைப்படங்கள்தான் திரையிடப்படுகிறது. சில பாலிவுட் திரைப்படங்கள் பாகிஸ்தானில் ரூ.100 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளது.

பாகிஸ்தானில் பாலிவுட் திரைப்படங்கள் திரையிடப்படாததால் 70% வரை திரைத்துறைக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in