அமெரிக்க பள்ளியில் இளைஞர் துப்பாக்கிச் சூடு: 2 மாணவர்கள், 1 ஆசிரியர் காயம்

அமெரிக்க பள்ளியில் இளைஞர் துப்பாக்கிச் சூடு: 2 மாணவர்கள், 1 ஆசிரியர்  காயம்
Updated on
1 min read

அமெரிக்க ஆரம்பப் பள்ளி ஒன்றில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஓர் ஆசிரியர் உட்பட இரு மாணவர்கள் காயமடைந்தனர்.

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை ஆரம்பப் பள்ளியில் நுழைந்த இளைஞர் ஒருவர், துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் ஒரு ஆசிரியர் உட்பட இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பள்ளியின் பொறுப்பாளர் கூறும்போது, "இந்தத் தாக்குதல் நடந்தது துரதிஷ்டவசமானது. இந்த சம்பவத்தால் எங்களது மனம் மிகுந்த வருத்தத்துக்குள்ளாகியுள்ளது" என்றார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்க போலீஸ் அதிகாரிகள், "ஆரம்பப் பள்ளியில் தாக்குதல் நடத்தியவரின் வீடு பள்ளியிலிருந்து சில மைல் தொலைவில்தான் அமைந்திருக்கிறது. ஆரம்பப் பள்ளியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் அந்த நபர் அவரது தந்தை ஜெஃப்ரி ஆஸ்பார்ன் (47) என்பவரை சுட்டுக் கொன்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஆரம்பப் பள்ளிக்குச் சென்று துப்பாக்கியால் சரமாரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறார். தாக்குதலை நடத்திய இளைஞரை கைது செய்து இருக்கிறோம்" என்று கூறினர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in