சீனாவில் 10 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு

சீனாவில் 10 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு
Updated on
1 min read

பெய்ஜிங்: 10 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசரின் கால் தடம் ஒன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது லெஷன் என்ற நகரம். இங்கு உணவகம் ஒன்றின் கட்டுமானத்தின்போது பல கோடி வருடங்களுக்கு முந்தைய டைனோசர்கள் கால் தடம் கண்டறியப்பட்டதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, “ சிச்சுவான் மாகாணத்தின் லெஷனில் உள்ள உணவகத்தின் முற்றத்தில், கிரெட்டேசியஸ் காலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் கால் தடங்கள் அங்கிருந்த கற்களில் காணப்பட்டன. இந்த கால் தடங்கள் பதியப்பட்டு 10 கோடி வருடங்கள் இருக்கும். இந்த கால் தடங்கள் அழுக்கு அடுக்குகளால் புதைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தனர்.

கண்டறியப்பட்ட கால் தடங்கள் சௌரோபாட்ஸ் டைனோசர் வகையை சார்ந்தது. இவை நீண்ட கழுத்துகளை உடையவை. பூமியில் வாழ்ந்த மிகப் பெரிய உயிரினமாக இந்த சௌரோபாட்ஸ் வகை டைனோசர்கள் அறியப்படுகின்றன.

சீனாவில் கண்டறியப்பட்ட கால்தடம் சுமார் 26 அடி நீளம் கொண்டது.

டைனோசர்கள் எப்படி இறந்தது? - சுமார் 10 கிலோமீட்டர் விட்டமுடைய ஒரு பெரிய விண்கல் பூமியில் மோதியதன் காரணமாக அடுத்தடுத்து உண்டான இயற்கை மாற்றங்களாலும், காலநிலை மாற்றங்களாலும் டைனோசர்கள் இனம் அழிந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எனினும், இந்த விண்கல் மோதலில் டைனோசர் இனம் முழுமையாக அழிந்துவிடவில்லை என்றும், மெக்சிகோவின் யூகாடான் தீபகற்பத்தின் கீழே ஒரு மிகப்பெரிய எரிமலை வெடிப்பு டைனேசர்கள் அழிவுக்கு கூடுதல் காரணமாக அமைந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in