Published : 26 Jun 2014 11:16 AM
Last Updated : 26 Jun 2014 11:16 AM

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்யா மதிக்க வேண்டும்: நேட்டோ நாடுகள் வலியுறுத்தல்

உக்ரைனில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டும் என நேட்டோ நாடுகளின் வெளியு றவு அமைச்சர்கள் ரஷ்யாவை வலியுறுத்தி உள்ளனர்.

ரஷ்ய ஆதரவாளர்கள் அதிக அளவில் வசிக்கும் ஸ்லேவ் யான்ஸ்க் நகருக்கு அருகே ராணுவ ஹெலிகாப்டரை கிளர்ச்சியா ளர்கள் சுட்டு வீழ்த்தினர். இதில் 9 வீரர்கள் பலியாயினர். மேலும் பிரிவினைவாதிகள் துப்பாக் கியால் சுட்டதில் 2 வீரர்கள் கொல் லப்பட்டனர்.

இதையடுத்து, ஸ்லேவ்யான்ஸ்க் நகரின் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என உக்ரைன் புதிய அதிபரும் மேற்கத் திய நாடுகளின் ஆதரவாள ருமான பெட்ரோ போரோ ஷென்கோ எச்சரிக்கை விடுத்துள் ளார். மேலும் போர் நிறுத்த ஒப்பந் தத்தை செயல்படுத்துமாறு ரஷ்ய அதிபரை வலியுறுத்த வேண்டும் என நேட்டோ நாடுகளுக்கு உக்ரைன் புதிய அதிபர் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் உக்ரைன் ராணுவ வீரர் கள் 1.2 லட்சம் பேர் புதன்கிழமை காலையில் ஸ்லேவ்யான்ஸ்க் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருவதாக ஏஎப்பி செய்தி யாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, "இப்போது நாங்கள் அமைதியாக இருக்கி றோம். போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததும் சூறாவளி போல தாக்குதல் நடத்துவோம்" என பிரிவினைவாத குழுவைச் (ஒலெக்சான்டர் தி சோல்ஜர்) சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் மீதான தாக்குத லைக் கண்டித்துள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் இருதரப் புக்கும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று ரஷ்ய நாடாளு மன்றத்தை கேட்டுக் கொண்டுள் ளார்.

நேட்டோ வலியுறுத்தல்

27 நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டுள்ள பெல்ஜியம் வெளியுறவு அமைச்சர் டிடியர் ரேண்டர்ஸ் கூறுகையில், "உக்ரை னில் போர் நிறுத்த ஒப்பந்தம் வெற்றிபெறவில்லை" என்றார்.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் கூறுகையில், "ரஷ்யாவிடமிருந்து நல்ல செய்தி வந்த போதிலும், அது செயல் வடிவம் பெறவில்லை" என்றார். உக்ரைனில் பிரிவினைவாதி களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால் ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதார தடை விதிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x