சீனாவின் அணு ஆயுத நவீனமயமாக்கலுக்கு இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உந்துதல்: பெண்டகன் அறிக்கையில் தகவல்

சீனாவின் அணு ஆயுத நவீனமயமாக்கலுக்கு இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உந்துதல்:  பெண்டகன் அறிக்கையில் தகவல்
Updated on
1 min read

இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் கைவசம் உள்ள ராணுவ திறன்களே சீனாவை அதன் அணு ஆயுதங்களை நவீனமயமாக்க உந்து விசையாக செயல்பட்டுள்ளது என்று அமெரிக்க ராணுவ தலைமைச் செயலகம் பெண்டகன் தெரிவித்துள்ளது.

சீனாவின் அணு சக்தி குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு பெண்டகன் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சீனா தனது அணு ஆயுத சக்திகளுக்கு புதிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு தொடர்பு திறான் சாதனங்களை அமைத்து வருகிறது.

அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் வளர்ந்துள்ள ராணுவ தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து சீனாவும் அணு ஆயுத மொபைல் மிசைல்களில் இரட்டை இலக்கு தாக்குதல் தொழில்நுட்பத்தை புகுத்தி வருகிறது, அதே போல் இந்தியாவின் அணு ஆயுத சக்தியும் சீனாவின் நவீனமயமாக்கலுக்கு ஒரு உந்து சக்தியாக அமைந்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் திறன்கள் தற்போது சீனாவில் போர்முனை தகவல்கள் மற்றும் அனைத்து கட்டளை பிறப்பிடங்களை இணைக்கும் தொடர்பு சாதனங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

அதே போல் தற்காப்பு உத்திகளிலும் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யாவை அடுத்து சீனா சில தொழில்நுட்ப நுணுக்கங்களை தங்கள் அணு ஆயுதங்களில் புகுத்தி வருகிறது. இதனுடன் ராணுவ வீரர்களுக்கு உயர் தொழில் நுட்ப பயிற்சி, உண்மையான போர் முனையை போல் செய்யும் சண்டை சூழ்நிலைகளில் தாக்குதல் நடத்துவது எப்படி போன்ற பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இதனுடன் புதிய தலைமுறை ஏவுகணைகள் ஆகியவற்றின் மூலம் சீனாவின் தாக்குதல் திறன்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது எந்த ஒரு அணு ஆயுதத் தாக்குதலை எதிர்த்து தாங்கவும், அதே வேளையில் பகைவரிடத்தில் நினைத்து பார்க்க முடியாத சேதத்தை விளைவிக்கவும் தங்கள் அணு ஆயுத பலத்தை பல்வேறு விதமாக சீனா வலுப்படுத்தி வருகிறது.

தெற்கு சீன கடல் பகுதியை தனது இந்த ராணுவத் திட்டங்களுக்கான சோதனைச் சாலையாக சீனா பயன்படுத்ட திட்டமிட்டுள்ளது, என்று பெண்டகன் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in